உள்ளூர் செய்திகள்

தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு 2 ஆம் கட்டமாக மாதம் ரூ.1000- நிதி உதவியை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 9852 மாணவிகளுக்கு நிதி உதவி-கலெக்டர் சாந்தி தகவல்

Published On 2023-02-09 15:26 IST   |   Update On 2023-02-09 15:26:00 IST
  • கடந்த 5 மாதங்களாக ரூ.27,491,000 தொகையினை மாணவி களின் வங்கிகணக்கிற்கு அனுப்பபட்டது.
  • இத்திட்டத்தில் 5570 மாணவிகள் பயன்பெற்றுவருகிறார்கள்.

தருமபுரி, 

தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் 4282 மாணவிகளுக்கு 2 ஆம் கட்டமாக மாதம் ரூ.1000- நிதி உதவிகளை மாவட்ட கலெக்டர் கி.சாந்தி வழங்கினார்.

தருமபுரி மாவட்டத்தில் புதுமைப்பெண் மாதம் ரூ.1000- வழங்கும் திட்டத்தின் கீழ் 5570 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000- வீதம் முதற்கட்டமாக கடந்த 5 மாதங்களாக ரூ.27,491,000 தொகையினை மாணவி களின் வங்கிகணக்கிற்கு அனுப்பபட்டு பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தில் 5570 மாணவிகள் பயன்பெற்றுவருகிறார்கள்.

இத்திட்டத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டத்தில் 4183 பேருக்கு இன்றைய தினமே அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000- செலுத்தப்பட்டு ATM Debit Card அவர்களது வீட்டிற்கே தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மாதம் ரூ.42,82,000- உதவி பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டத்தில் 5570 பயனாளிகளும், இரண்டாவது கட்டத்தில் 4282 பயனாளிகளும் ஆக இம்மாவட்டத்தில் மொத்தம் 9852 பயனாளிகள் இத்திட்டத்தில் மூலம் பயனடைந்து வருகிறார்கள் என கலெக்டர் கூறினார்.

இவ்விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மண்டல இணை இயக்குநர், கல்லூரி கல்வி இயக்ககம் என்.ராமலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) வி.ஜான்சிராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், பாலக்கோடு அரசு கலைக் கல்லூரி முதல்வர் செண்பகலெட்சுமி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு.குணசேகரன், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News