உள்ளூர் செய்திகள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் ரூ.72.42 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் -கலெக்டர் சாந்தி தகவல்

Published On 2022-09-30 09:58 GMT   |   Update On 2022-09-30 09:58 GMT
  • கலெக்டர் சாந்தி தலைமையில் சிறப்பு செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
  • ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டங்களின் பயன்கள் குறித்தும் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

தருமபுரி,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், நலத்திட்டங்கள் பெற்று பயன்பெற்ற விவசாயிகளை நேரில் சந்தித்து விவசாயிகள் பெற்ற வேளாண் நலத்திட்டங்களின் பயன் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் சிறப்பு செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வேளாண் நலத்திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்களால் பயன்பெற்ற விவசாயிகளின் வயல்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டங்களின் பயன்கள் குறித்தும் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

பின்னர் மாவட்ட கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: -

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மைத்துறையின் மூலம் இதுவரை 94,723 விவசாயிகளுக்கு ரூ.2613.55 இலட்சம் (ரூ.26.14 கோடி) மதிப்பீட்டில் வேளாண் இடுப்பொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் இதுவரை 26,123 விவசாயிகளுக்கு ரூ.4419.06 இலட்சம் (ரூ.44.19 கோடி) மதிப்பீட்டில் வேளாண் இடுப்பொருட்கள், பழக்கன்றுகள், பலன் தரும் மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசன வசதிகள், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் மற்றும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் இதுவரை 98 விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ரூ.209.14 லட்சம் (ரூ.2.09 கோடி) மதிப்பீட்டில் வேளாண் கருவிகள், வேளாண் வாடகை மையங்கள் மற்றும் மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 1,20,944 விவசாயிகளுக்கு ரூ.7,241.75 லட்சம் (ரூ.72.42கோடி) மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்கள், பழக்கன்றுகள், பலன் தரும் மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசன வசதிகள், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் கருவிகள் வேளாண் கருவிகள், வேளாண் வாடகை மையங்கள் மற்றும் மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு 1,20,944 விவசாயிகள் தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய 3 துறைகளின் மூலம் மட்டும் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ)குணசேகரன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பெருமாள், மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News