உள்ளூர் செய்திகள்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 37,217 நோயாளிகளுக்கு சிகிச்சை -கலெக்டர் சாந்தி தகவல்

Published On 2022-09-24 15:11 IST   |   Update On 2022-09-24 15:11:00 IST
  • 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.
  • சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் நான்காம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, சிறந்த முறையில் பணியாற்றிய காப்பீட்டு ஒருங்கிணைப ்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் இக்காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிறப்பு சிகிச்சை பெற்று, நலம் பெற்ற பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையேற்று, 5 பயனாளிகளுக்கு பரிசு களையும் வழங்கி பாராட்டி, 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இந்த நான்கு ஆண்டுகளில் ரூ.63.97 கோடி மதிப்பீட்டில் 37,217 நோயாளிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்து வமனைகளில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தருமபுரி மாவட்டத்தில் முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரையில் 3,36,739 குடும்பங்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொ) ராஜேஷ்கண்ணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.ராஜ்குமார், துணை இயக்குநர் (தொழுநோய்) புவனேஸ்வரி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News