உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

அங்கீகாரமில்லாத தனி வீட்டுமனைகளுக்கு உள்ளாட்சிகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம்

Published On 2022-06-16 07:50 GMT   |   Update On 2022-06-16 07:50 GMT
  • விற்பனையாகாத மனைகளை வரன்முறை செய்து, அங்கீகாரம் பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
  • .விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து அதிகாரிகள் பரிந்துரையுடன்அங்கீகார சான்று பெற்றுக்கொள்ளலாம்.

திருப்பூர் :

தமிழக அரசு 2016ம் ஆண்டுக்கு முன் கிரயம் செய்த வீட்டுமனைகளை அங்கீகாரம் செய்து கொள்ள அவகாசம் வழங்கியது. விற்பனையாகாத மனைகளை வரன்முறை செய்து, அங்கீகாரம் பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக வீட்டுமனை வரன்முறை செய்யப்படுகிறது. இருப்பினும் கிராமப்புறத்தில் உள்ள வீட்டுமனைகளைவரன்முறை செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. மனை உரிமையாளர்கள் எவ்வித அங்கீகாரம் செய்வது குறித்து விழிப்புணர்வு இல்லை.

திருப்பூர் மாவட்டத்தில் நகரையொட்டியுள்ள ஊராட்சிகளில் வீட்டுமனை வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இதனால் சற்று தொலைவில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அங்கு வீட்டுமனை வாங்கினர்.கடந்த 2016க்கு பின் அங்கீகாரம் பெற்ற மனைகள் மட்டுமே விற்கப்படுகிறது. முறையான அங்கீகாரம் பெறாமல் இருக்கும் மனைகளை, மனை உரிமையாளர்கள் வரன்முறை செய்து கொள்ளலாம் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வீட்டுமனை உரிமையாளர், மனை ஒன்றுக்கு பரிசீலனை கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். வளர்ச்சி கட்டணமாக சதுர மீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கணக்கிட்டு, வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அரசுக்கு சேர வேண்டிய வரன்முறை கட்டணமாக சதுர மீட்டருக்கு, 45 ரூபாய் வீதம் கணக்கிட்டுகருவூலத்தில் செலுத்த வேண்டும்.

இதுகுறித்து திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அங்கீகாரமற்ற வீட்டுமனையை வரன்முறை செய்துகொள்ளலாம். ஊராட்சிகளில் அதற்கான சலான்களை பெற்றுபூர்த்தி செய்து அந்தந்த வங்கிகளில் செலுத்த வேண்டும்.விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து அதிகாரிகள் பரிந்துரையுடன்அங்கீகார சான்று பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு நடைமுறைகள் எளிதாக மாற்றப்பட்டுள்ளன. மனை உரிமையாளர்இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News