இரு தரப்பினர் மோதல்: 10 பேர் மீது வழக்கு
- எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் சைக்கிள் மீது மோதியது.
- போலீசார் சீனப்பா (52), பாப்பம்மா (40), முனிராஜ் (25), முருகேசன் (30), சந்திரகலா (34) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள கூச்சனூரை சேர்ந்தவர் காந்தம்மா (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் சீனப்பா (52). உறவினர்கள். கடந்த 15-ந் தேதி காந்தம்மாவின் மகனான 9-ம் வகுப்பு மாணவர் கோகுல் (16) என்பவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சீனப்பா மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அந்த நேரம் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் சைக்கிள் மீது மோதியது. இதில் கோகுல் காயம் அடைந்தார்.
அந்த நேரம் சீனப்பா கோகுலை தாக்கினார். இது குறித்து காந்தம்மா கேட்டார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் கோகுல், அவரது தரப்பை சேர்ந்த சைத்ரா (22), பவானி (24) ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
அது குறித்து காந்தம்மா பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சீனப்பா (52), பாப்பம்மா (40), முனிராஜ் (25), முருகேசன் (30), சந்திரகலா (34) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதே போல சீனப்பா ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது தரப்பில் தானும், பாப்பம்மா (40), முனிராஜ் (25) ஆகிய 3 பேர் காயமடைந்ததாக புகார் செய்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் பிரவீன்குமார் (25), ராஜீவ்காந்தி (30), பவானி (24), காந்தம்மா (36), ராஜப்பா (37) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.