உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2023-10-29 15:15 IST   |   Update On 2023-10-29 15:15:00 IST
  • பென்னாகரம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மதுப்பாட்டில்கள் பறிமுதல்.

பெரும்பாலை போலீசார் அனுமந்தபுரம் சாமியார் கொட்டாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு சாக்குபையில் ஒருவர் மதுப்பாட்டிகளை மறைத்து வைத்து விற்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது அவர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா ஏரங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜி என்பவர் மகன் முருகன்(55) என்பதும் அவர் அவர் சட்ட விரோதமாக மதுப்பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு் விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது அவரிடமிருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதே போன்று பெரும்பாலை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மஞ்ச நாயக்கன்அள்ளி கரூர் மாரியம்மன் கோவில் அருகே பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு சாக்கு பையில் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது பென்னாகரம் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 61) என்பது தெரியவந்தது. அவர் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்று வந்ததை அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 15 மதுப்பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.  

Tags:    

Similar News