உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு அடங்கல் சான்று வழங்கப்பட்டது.

குறுவை தொகுப்பு திட்ட முகாம்

Published On 2022-07-08 09:23 GMT   |   Update On 2022-07-08 09:23 GMT
  • அதன் அடிப்படையில் மதுக்கூர் வட்டாரத்தில் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
  • உடனடியாக உழவன் செயலியிலும் பதிவேற்றம் செய்து வேளாண் உதவி இயக்குனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.

மதுக்கூர்:

குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு தகுதியான விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி .ஏ .பி, அரை மூட்டை பொட்டாஸ் ஆவணங்களின் அடிப்படையில் மற்றும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்து அதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இதற்காக தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் துறை, வேளாண் உதவி அலுவலர்களும், வருவாய் துறை கிராம நிர்வாக அலுவலர்களும் அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தி தகுதியான விவசாயிகளுக்கு அடங்கல் சான்று வழங்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் மதுக்கூர் வட்டாரத்தில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. சொக்கநாவூர் கிராமத்தில் வேளாண்உதவி இயக்குனர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி குறுவை சாகுபடிக்கான அடங்கல் வழங்கும் பணி யினை ஆய்வு செய்தனர்.

சொக்கநாவூர் மற்றும் புளியங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் வேளாண் உதவி அலுவலர் தினேஷ்குமார் ஆய்வு செய்து உடனடியாக உழவன் செயலியிலும் பதிவேற்றம் செய்து வேளாண் உதவி இயக்குனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.

புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளை ஊக்கப்படுத்தி காலத்தை உரிய ஆவணங்களை வழங்கி பயன்பெற கேட்டுக் கொண்டார்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி சொக்கநாவூர் கிராமத்தில் நடவு செய்யப்பட்டுள்ள ஏஎஸ்டி16 வயலினை ஆய்வு செய்து பதிவு செய்யாத விவசாயிகளை உடனடியாக பதிவு செய்து மானியத்தில் உரங்கள் பெற கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News