போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் செடிகள்.
அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் செடிகள்
- மஞ்சள் அறுவடைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
- வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மஞ்சள் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் அறுவடைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதில் போச்சம்பள்ளி, பண்ணந்தூர், பெரிய புளியம்பட்டி, மைலம்பட்டி, பெரமகவுண்டனூர், கண்ணுகானூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மஞ்சள் பயிரிட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
சூரிய பொங்கல் , மாட்டுப் பொங்கல் மற்றும், காணும் பொங்கலின்போது வைக்கப்படும் படையலில் கரும்பு, பூசணி, மொச்சை அவரை இவைகளுடன், முக்கிய பொருளாக பச்சை செடியுடன் மஞ்சள் வைத்து, பொங்கலிட்டு கடவுளை வழிபாடு செய்வது தமிழர்களின் வழக்கம்.
இதனால் இப்பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் ஓரிரு நாட்களில் அறுவடை செய்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்க, விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
மேலும் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.
மேலும் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மஞ்சள் விலை கடுமையாக குறைந்த நிலையில் இந்த ஆண்டு விவசாயிகள் எதிர்ப்பார்க்கும் விலை கிடைக்கும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.