உள்ளூர் செய்திகள்

கடையநல்லூர் மார்க்கெட் சாலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கடையநல்லூரில் தடையை மீறி ஆட்டோ சங்கம் அமைக்க முயற்சி?- பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-01-22 12:57 IST   |   Update On 2023-01-22 12:57:00 IST
  • போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.
  • இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென்புறம் தினசரி மார்க்கெட் மற்றும் முப்புடாதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த இடத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போலீசிடம் அனுமதி கேட்டு மனு வழங்கப்பட்டது. ஆனால் போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் இன்று இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் அந்த இடத்தில் போலீஸ் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் போலீசார் அந்த பகுதியில் இருபுறமும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News