உள்ளூர் செய்திகள்

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம். 

திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

Published On 2023-10-22 10:23 GMT   |   Update On 2023-10-22 10:23 GMT
  • திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை தாங்கி வீரவணக்கம் செலுத்தினார்.
  • போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

திருப்பூர்:

இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. காவல்துறை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட பிரிவுகளில் தேசத்தை பாதுகாக்கும் வகையில் வீரமரணம் அடைந்த 254 காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நினைவு தூண் அமைக்கப்பட்டது.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை தாங்கி வீரவணக்கம் செலுத்தினார். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், போலீஸ் துணை கமிஷனர்கள் அபிஷேக் குப்தா (வடக்கு), வனிதா (தெற்கு), ஆசைத்தம்பி (தலைமையிடம்), மநகர கூடுதல் துணை கமிஷனர்கள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர்கள் வானத்தை நோக்கி மூன்று முறை 48 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். வீரவணக்கம் அடைந்த காவலர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

Tags:    

Similar News