உள்ளூர் செய்திகள்
மின்கம்பம் மீது லாரி மோதியதில் வயர்கள் அறுந்து பெண் மீது விழுந்தது- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
- மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பட்டம்மாள் என்பவர் மீது வயர்கள் விழுந்தன.
- மின்வயர் அறுந்ததும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் பட்டம்மாள் உயிர் தப்பினார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கொடூர் ஊராட்சிக்குட்பட்ட தட பெரும்பாக்கம் கிருஷ்ணாபுரம் சாலையில் மின்கம்பங்கள் உள்ளன.
இந்த நிலையில் அவ்வழியே சென்ற லாரி ஒன்று சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு மின் கம்பத்தின் மீது மோதி சென்று விட்டது.
இதில் மின்கம்ப வயர்கள் திடீரென அறுந்து விழுந்தன. அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பட்டம்மாள் என்ப வர் மீது வயர்கள் விழுந்தன. மின்வயர் அறுந்ததும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும் சாலையின் குறுக்கே மின் கம்பம் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் பொன்னேரி மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.