உள்ளூர் செய்திகள்
தாசில்தார் நந்தகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட காட்சி.
குட்டை நிலம் ஆக்கிரமிப்பு-அதிகாரிகள் ஆய்வு
தாசில்தார் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் சங்கோதி பாளையத்தில் அளவீடு பணி நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் அருகே காரணம்பேட்டையில்,அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம்,சங்கோதி பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.இதையடுத்து தாசில்தார் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் சங்கோதி பாளையத்தில் அளவீடு பணி நடைபெற்றது.
சர்வேயர் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்டோர் அளவீடு பணியை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு புகார் கூறப்பட்டுள்ள இடத்தை தாசில்தார் நந்தகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.