உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை

Published On 2023-10-01 11:49 IST   |   Update On 2023-10-01 11:49:00 IST
  • மணப்பாறை; குழந்தை இல்லாததால் கணவர் டார்ச்சர்-இளம்பெண்தற்கொலை
  • இந்த தம்பதியருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருச்சி  

திருச்சி மணப்பாறை புத்தாநத்தம் என். பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி அஞ்சலை (வயது 27). இந்த தம்பதியருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. மேலும் குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி முத்துகிருஷ்ணன் மனைவியை மனரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாயார் சரசு புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் அஞ்சலையின் இறப்புக்கு வரதட்சணை கொடுமை ஏதும் உள்ளதா? என்ற கோணத்தில் ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். குழந்தை இல்லாத பிரச்சனையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News