உள்ளூர் செய்திகள்

உப்பிலியபுரத்தில் சுவர் இடிந்து விழுந்து இளம் பெண் பலி

Published On 2022-07-23 15:16 IST   |   Update On 2022-07-23 15:16:00 IST
  • மதுமதியும், அவரது அண்ணன் மகள் மித்ரா (6), இருவரும் வீட்டு வாசலில்அமர்ந்திருந்த பொழுது, எதிரேயிருந்த வேலாயுதம் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து, இருவரின் மேல் விழுந்தது
  • சிகிச்சை பலனின்றி மதுமதி இறந்தார்

திருச்சி,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மதுமதி (வயது 27).கணவர் பெயர் பிரகாஷ்.

நேற்றிரவு மதுமதியும், அவரது அண்ணன் மகள் மித்ரா (6), இருவரும் வீட்டு வாசலில்அமர்ந்திருந்த பொழுது, எதிரேயிருந்த வேலாயுதம் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து, இருவரின் மேல் விழுந்தது.

இடிபாடுகளுக்கிடையே சிக்கிய மதுமிதா, பலத்த காயமடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக துறையூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுமதி இறந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

லேசான காயங்களுடன் இருந்த குழந்தை மித்ரா சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News