உள்ளூர் செய்திகள்

உலக பணத்தாள்கள்-நாணயங்கள் கண்காட்சி

Published On 2022-07-13 09:36 GMT   |   Update On 2022-07-13 09:36 GMT
  • உலக பணத்தாள்கள்-நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது
  • தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில்

திருச்சி:

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வரலாற்றுத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உலக பணத்தாள்கள், நாணயங்கள், புழங்கு பொருட்கள் குறித்த வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது. திருச்சி-தஞ்சை திருமண்டல குருத்துவ செயலாளரும், பள்ளி தாளாளருமான சுதர்சன் கண்காட்சியினை திறந்து வைத்தார்.

தலைமை ஆசிரியர் ஞான சுசீஹரன், வரலாற்றுத்துறை ஆசிரியர் சுரேஷ், பிரபாகர் சம்பத் ஒருங்கிணைப்பில் திருச்சி பணத்தாள்கள் சேகரிப்பு சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர், ரமேஷ், சந்திரசேகரன், தாமோதரன், பத்ரி நாராயணன் உட்பட பலர் தனது சேகரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.

அதில் உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து நாடுகளின் நாணயங்கள் பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டன.அல்ஜீரிய தினார், அங்கோலா குவான்சா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா கிழக்கு கரீபியன் டாலர், அர்ஜென்டினா பேசோ, ஆஸ்திரேலிய டாலர், ஆஸ்திரியா யூரோ, அஜர்பைஜான் மனாட், பஹாமாஸ் டாலர், பஹ்ரைன் தினார், பங்களாதேஷ் டாக்கா, பார்படாஸ் டாலர், பெலாரஸ் ரூபிள், பெல்ஜியம் யூரோ, புருனே டாலர், புருண்டி பிராங்க், கம்போடியா ரியல், கனடா டாலர், சிலி பெசோ, சீனா யுவான், கொலம்பியா பெசோ, சைப்ரஸ் யூரோ, குடியரசு காங்கோ பிராங்க், கரீபியன் டாலர், டொமினிக்கன் குடியரசு பெசோ, அமெரிக்க டாலர், எஸ்டோனியா யூரோ, பின்லாந்து யூரோ, ஜெர்மனி யூரோ, இந்திய ரூபாய், இந்தோனேசிய ரூபாய், ஈரான் ரியால் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ கால நாணயங்களும் மலையமான், சம்பூர ராயர், மதுரை நாயக்கர், விஜயநகர், ஆற்காடு நவாப், கோனேரி ராயன், பிரிட்டிஷ் இந்தியா, சுதந்திர இந்தியா நாணயங்களுடன் சுடுமண்ணலான காதணிகள், புதை உயிரி படிமங்கள், டயானா சிறப்பு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறைகள், மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் மகாத்மா காந்தி சிறப்பு அஞ்சல் தலை அஞ்சல் உறைகள் சிறப்பு நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

Tags:    

Similar News