உள்ளூர் செய்திகள்
நேர்முக தேர்வுக்கு சென்ற இளம்பெண் மாயம்
- நேர்முக தேர்வுக்கு சென்ற இளம்பெண் மாயமானார்
- என்ஜினீயரிங் கல்லுாரியில் டைப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார்
திருச்சி:
திருச்சி உறையூர் காவேரி நகர் 5-வது கிராசை சேர்ந்த ராஜா மகள் ஐஸ்வர்யா(வயது 25). இவர் மூகாம்பிகை என்ஜினீயரிங் கல்லுாரியில் டைப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதிய வேலை ஒன்றில் சேர்வதற்காக நடத்தப்படும் இண்டர்வியூவில் கலந்து கொண்டு வருவதாக தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் பலன் இல்லாததால், திருச்சி உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போது மாயமான ஐஸ்வர்யாவிற்கும், அதே கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றும் தேவா என்பவருக்கும் காதல் இருந்து வந்தது தொிய வந்துள்ளது. அதனால் அந்த பேராசிரியருடன் ஐஸ்வர்யா ஓட்டம் பிடித்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.