உள்ளூர் செய்திகள்

நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-07-25 10:33 GMT   |   Update On 2022-07-25 10:33 GMT
  • திருச்சியில் நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் மாணவர்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
  • விழாவில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணி தலைவர் ச.அவனி மாடசாமி காமராஜரின் அரிய சாதனைகளை பட்டியலிட்டு புகழாரம் சூட்டினார்

திருச்சி:

நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் திருச்சி சார்பில் பாலக்கரை சந்தன மஹாலில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா, 1,200 மரக்கன்றுகள் மற்றும் 1,200 நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா, சமுதாய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா, விளையாட்டு விழா, பேச்சுப்போட்டி விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.விழாவுக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜன் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.

சங்கத்தின் செயலாளர் எஸ்.மேகநாதன், பொருளாளர் எ.ஜெயமோகன், ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.டி.வி.திருமணி, பி.ஆர்.ராஜா, துணைத் தலைவர் எம். பழனிக்குமார், துணைச் செயலாளர் எஸ்.ஜெயபாலன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்விக் குழுமங்களின் தலைவர் எல்.தேவதாஸ் சாமுவேல் வரவேற்றுப் பேசினார்.

இதில் மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ. 2 லட்சம் செலவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணி தலைவர் ச.அவனி மாடசாமி காமராஜரின் அரிய சாதனைகளை பட்டியலிட்டு புகழாரம் சூட்டினார்.

திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் மணி பிரகஷ்பதி, தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திர குமார், திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பி.சுரேஷ், என்.டி.ஆர். பவுண்டேஷன் பொதுச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரி செயலாளர் என்ஜினீயர் கனகராஜன், டாக்டர் ஷர்மிலி மதுரம், என்.டி.ஆர். பவுண்டேஷன் தலைவர் டாக்டர் அர்னால்டு அரசு, புதுக்கோட்டை பாரதி மகளிர் கல்வி குழும தலைவர் குரு தனசேகரன், பிரபல கல்வியாளர் டாக்டர் ஜேம்ஸ் ரெல்டன், டாக்டர் ஐவன் மதுரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மதுரை நாடார் மகாஜன சங்க துணை தலைவர் போஸ்.செல்வகுமார், திருச்சி நாடார் உறவின்முறை சங்க தலைவர் காளிராஜன், ஸ்ரீரங்கம் பகுதி நாடார் நலச்சங்க தலைவர் செல்வமுருகன், செயலாளர் ராஜா, அமைப்புச் செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் கணேசன், உதவி தலைவர் சிவசாமி, எடமலைப்பட்டி புதூர் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பொன்ராஜ், செயலாளர் இசக்கிமுத்து, சேகர் மைக்கேல், ஞானசக்தி,

காட்டூர் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் இளங்கோ, அருள், ஏசையா, பாலக்கரை நாடார் சமூக இளைஞர் சங்க துணைத் தலைவர் அக்ரி சதீஷ், திருச்சி மாவட்ட பாரத பெருந்தலைவர் காமராஜர் பேரவை பிரதிநிதி மூர்த்தி, காமராஜர் நற்பணி மன்றம் திருவானைக்கோவில் சார்பில் லட்டு மாரியப்பன், வடக்கு தாரா நல்லூர் ஸ்ரீ பால் பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகி பழக்கடை சரவணன், பழைய கரூர் ரோடு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் நிர்வாகி கலைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை நெல்லை உறவின்முறை நாடார் சங்க நிர்வாகிகள் ஜெயபால், அய்யனார், பட்டு முருகன், உறையூர் சுந்தர், பகவதி பாண்டியன், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News