உள்ளூர் செய்திகள்

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-ன் வார்டு குழுகூட்டம்

Published On 2023-08-30 14:22 IST   |   Update On 2023-08-30 14:22:00 IST
  • திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-ன் வார்டு குழுகூட்டம் மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது
  • வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 திருச்சி,

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-ன் வார்டு குழு கூட்டம் மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில், உதவி ஆணையர் சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கே. எஸ். நாகராஜன், கமால் முஸ்தபா, வெ. ராமதாஸ், க. சுரேஷ் குமார், பைஸ் அஹமது, சோபியா விமலா ராணி, விஜயா ஜெயராஜ் , விஜயலட்சுமி சரவணன், நாகலட்சுமி நம்பி ,பங்கஜம் மதிவாணன் ,முத்துக்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் ரமேஷ், ரவிக்குமார், சந்திரசேகர், நிர்வாக அலுவலர் வசந்தி, சுகாதார அலுவலர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், பிரசாத், பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வார்டுகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News