உள்ளூர் செய்திகள்

உப்பிலியபுரம் வெங்கடாசலபுரம் ஆர்.எஸ்.கே. இன்டர்நேஷனல் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்

Published On 2022-08-12 16:02 IST   |   Update On 2022-08-12 16:02:00 IST
  • போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனிதனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளைக்கு செல்லும் நரம்பின் பாதிப்பால் நினைவாற்றல் குறைகிறது
  • .போதை பொருள்களை உபயோகிப்பவர்கள், விற்பனை செய்பவர்களை பற்றி தகவலறிந்தால் காவல் துறையினரிடமோ, பள்ளி அலுவலகத்திலோ தகவலளிக்க மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

திருச்சி :

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பள்ளியின் சேர்மன் கார்த்திகேயன் முன்னிலையில், துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் முகாம் நடைபெற்றது. போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனிதனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளைக்கு செல்லும் நரம்பின் பாதிப்பால் நினைவாற்றல் குறைகிறது எனவும், குட்கா, கஞ்சா, ஹெராயின், அபின், புகையிலை, சிகரெட் போன்றவைகளால் வரும் தீமைகளை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.

போதைப்பொருள்களில் சேர்க்கப்படும் கொடின் வகை மருந்துகளால் நரம்பு மண்டல பாதிப்புகள், மதுவினால் சிரோசில் எனும் கல்லீரல் பிரச்சனைகள், சிகரெட்டில் உள்ள நிகோடினால் நுரையீரல் பாதிப்புகளை பள்ளியின் சேர்மன் கார்த்திகேயன் உரையாற்றினார். போதைப் பொருள்களால் வரும் தீமைகளான, இதயம், நரம்பு மண்டல பாதிப்புகள், தொடர் பழக்கத்தால் அறிவாரந்த செயல்களில் பாதிப்பு, மனக் கட்டுப்பாட்டை தளர்த்துதல், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்ய தூண்டுதல்,

மற்றும் அவைகளை உபயோகப்படுத்தும் பட்சத்தில், எதிர்கால சீரழிவும், சமுதாயத்தில் குடும்பத்திற்கு ஏற்படும் அவப்பெயரும் விரிவாக மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.போதை பொருள்களை உபயோகிப்பவர்கள், விற்பனை செய்பவர்களை பற்றி தகவலறிந்தால் காவல் துறையினரிடமோ, பள்ளி அலுவலகத்திலோ தகவலளிக்க அறிவுறுத்தப்பட்டது.

பள்ளி மாணவ மாணவிகள் போதைப் பொருள்களுக்கெதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முகாமில் பள்ளியின் இயக்குனர் ரவிச்சந்திரன், தலைமையாசிரியை ரீனா உமாசங்கர், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News