உள்ளூர் செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கம் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல சோதனை ஓட்டம்

Published On 2023-09-07 10:06 GMT   |   Update On 2023-09-07 10:06 GMT
  • வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கம் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல சோதனை ஓட்டம் நடைபெறுகிறது
  • 16-ந் தேதி நடைபெறுகிறது

திருச்சி:

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை- மதுரை இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று, செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் வாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்றுள்ளது.

அதைத்தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இனி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல உள்ளது.

இதனை அமல் படுத்தும் விதமாக சோதனை நிறுத்தமானது வருகின்ற 16-ந் தேதி நடக்கிறது.

அதன் பின் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அனுமதியளிக்கும்.

இந்த ெரயில் தினமும் சென்னை எழும்புரில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 06.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ெரயில் நிலையம் வந்தடையும். மதுரையில் இருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட்டு காலை 09.36 ஸ்ரீரங்கம் ெரயில் நிலையம் வந்தடையும்.

ஸ்ரீரங்கம் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திருப்பது அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. ஸ்ரீநிவாசன் கூறும்போது,

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் சென்னை மற்றும் மதுரை பக்தர்கள் திருச்சி ஜங்ஷன் ெரயில் நிலையம் வந்து அதன் பின்னர் ஆட்டோ அல்லது பஸ்களில் ஸ்ரீரங்கத்துக்கு வர வேண்டி இருந்தது.

இனிமேல் வைகை எக்ஸ்பிரஸ் வரும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் ெரயில் நிலையத்துக்கு நேரடியாக வந்து அங்கிருந்து கோவிலுக்கு எளிதில் செல்வார்கள்.

பண்டிகை காலங்களிலும் இந்த ெரயில் வசதி மக்களுக்கு உபயோகம் உள்ளதாக இருக்கும். ஆகவே ஒரு தெற்கு ெரயில்வே நிர்வாகம் உடனடியாக இதனை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News