உள்ளூர் செய்திகள்

சவாலை சமாளிக்க தயாராகும் திருச்சி மாநகராட்சிரூ.6 கோடி செலவில் உருவாகும் கான்கிரீட் குப்பை மறுசுழற்சி மையம்

Published On 2023-09-29 14:29 IST   |   Update On 2023-09-29 14:29:00 IST
  • சவாலை சமாளிக்க தயாராகும் திருச்சி மாநகராட்சி
  • ரூ.6 கோடி செலவில் உருவாகும் கான்கிரீட் குப்பை மறுசுழற்சி மையம்


திருச்சி,


திருச்சி மாநகராட்சி 163.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு நாள்தோறும் 470 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது.


சிறந்த மாநகராட்சி


வீடுகள், வியாபார தளங்கள், ஹோட்டல்களில் இருந்து உருவாகும் இந்த குப்பையானது வீதிக்கு வராமல், தூய்மை பணியா ளர்கள் உதவியுடன், வாக னங்களில் சேகரித்து, எடுத்துச் செல்லப்பட்டு அரியமங்கலம் குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணி சீராக நடந்து வருவதன் காரணமாக தமிழக அரசால் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.


இந்திய அளவில் 6-வது இடத்தையும் எட்ட முடிந்தது. மாநகரில் சேரும் குப்பைகளை சிறப்பாக கையாண்டு, தூய்மையை, பேணி காக்கும், மாநகராட்சி க்கு, கட்டுமான பணியின் போது உருவாகும் கழிவுகள் மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்களால் உண்டாகும் கான்கிரீட் குப்பைகளை கையாள்வது பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக கடத்த 2020-ம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில் கான்கிரீட் குப்பைகளை கையாள்வதற்காக, புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.


அதன்படி அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரூ.6 கோடி செலவில் கான்கிரீட் குப்பை மறுசுழற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தின் மூலம் கான்கிரீட் குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சி முறையில், தரைத்தள ங்களில் பதிக்கப்படும் டைல்ஸ்களாகவும், நடைபாதையில் பதிக்கப்படும் சிமெண்ட் பிளாக் கற்களாகவும் மாற்றப்படும். இதற்காக மாநகரத்தின் 4 இடங்களில் கான்கிரீட் குப்பை சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டு, அங்கி ருந்து அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கான்கிரீட் குப்பை மறுசுழற்சி செய்யும் மையத்திற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.


டைல்ஸ், சிமென்ட், பிளாக் கற்கள் தயாரிக்கிறார்கள்


இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்த காங்கிரீட் குப்பைகள் நீர்நிலைகளி லும், காலி பிளாட்டுகளிலும் திருட்டுத்தனமாக கொட்டப்படுகிறது. இது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த கான்கிரீட் குப்பை மறுசுழற்சி மையம் அமைந்தால், காங்கிரீட் குப்பைகளால் ஏற்படும் சிரமம் தவிர்க்கப்படும். மேலும் இதன் மூலம் செய்யப்படும் டைல்ஸ்கள் மற்றும் சிமெண்ட் கற்கள் மாநகராட்சி பணிக்கு பயன்படுத்தப்படுவதோடு, விற்பனையும் செய்யப்பட உள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். புதிதாக அமையவுள்ள கான்கிரீட் மறு சுழற்சி மையத்தில் நாளொன்றுக்கு 50 டன் காங்கிரீட் கழிவுகள் கையாள முடியும். ஒரு வருடத்திற்குள் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.


Tags:    

Similar News