உள்ளூர் செய்திகள்

தா.பேட்டை காருகுடி கிராமத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-15 14:45 IST   |   Update On 2022-06-15 14:45:00 IST
  • பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும், இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் விதமாக காருகுடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் பேரணி சென்றனர்.
  • நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவு தேர்வுகளில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடும், அரசு வேலை வாய்ப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போன்ற அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி:

தா.பேட்டை அடுத்த காருகுடி கிராமத்தில்ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி இணைந்து மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி செல்வராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர்கள் கீதா, கலாராணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அரசுப்பள்ளியில் சேர்வோம்! ஆனந்தமாய் கற்போம் என்ற முழக்கத்தோடும், பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும், இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் விதமாக காருகுடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் பேரணி சென்றனர்.

மேலும் தமிழகஅரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல் குறிப்பேடு, புத்தகப்பை, காலணிகள், சீருடை,வண்ண பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, மிதிவண்டி போன்ற அனைத்தும் வழங்கப்படுவதோடு

நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவு தேர்வுகளில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடும், அரசு வேலை வாய்ப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போன்ற அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கிராம பொதுமக்கள் உட்பட பலரும் பேரணியில் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News