உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-14 14:50 IST   |   Update On 2022-06-14 14:50:00 IST
  • திருச்சி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சீர்வரிசையாக பள்ளிக்கு தேவையான உபகரணங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்

திருச்சி, ஜூன்.14-

திருச்சி கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி மற்றும் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

மாநகராட்சி கவுன்சிலர் மலர்விழி ராஜேந்திரன் மாணவர் சேர்க்கை பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி கே.கே.நகர் விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கி கக்கன் காலனி, காந்திநகர், மாதவன் சாலை வழியாக பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் சேர்ப்பீர், பள்ளியில் மாணவர்களை சேர்ப்பீர், அரசு பள்ளியில் சேர்ப்பீர், அரசு வேலையை வென்றிடுவேன் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கூறியபடி சென்றனர்.

மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சீர்வரிசையாக பள்ளிக்கு தேவையான உபகரணங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும் விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பர்வீன் பானு மற்றும் டி.ஆர்.டி.இ. பாலகுமார், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி முடிந்து பள்ளி வந்ததும் முதல் வகுப்பு மாணவர்களுக்கு நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் வனஜா செய்திருந்தார்.

Tags:    

Similar News