உள்ளூர் செய்திகள்

மகாலெட்சுமி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா

Published On 2022-12-27 15:17 IST   |   Update On 2022-12-27 15:17:00 IST
  • மகாலெட்சுமி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது
  • புறாக்கள் பறக்கவிடப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

திருச்சி:

திருச்சி அடுத்த துடையூர் மகாலெட்சுமி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவன் அக்‌ஷய் வரவேற்று பேசினார். புறாக்கள் பறக்கவிடப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. போட்டியினை மகாலெட்சுமி கல்வி குழும தாளாளர் ரவி கொடியசைக்க, மகாலெட்சுமி கல்வி குழும ஆலோசகர் ரோட்ே்டரியன் சீனிவாசன், துளசி பாலசுப்பிரமணியன், ராஜா ராம், ரூபினி, பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி முதல்வர் ெஜயசீலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.விழாவில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. மாணவர்களுக்கு 20 மீட்டர் ஓட்டபந்தயமும், 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டபந்தயமும், 3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மீட்டர் ஓட்டபந்தயமும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டபந்தயமும் நடைபெற்றது. பின்பு தடகள போட்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. எல்.கே.ஜி. முதல் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு பாராசூட் ட்ரில் நடைபெற்றது.3 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரமிடு மற்றும் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டுதொத்த சாம்பியன் கோப்பையினை பள்ளி எம்ரால்டு அணி ெவன்றது. முடிவில் மாணவன் தரணிதரன் நன்றி கூறினார். மகாலெட்சுமி குழும ஆலோசகர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் விழாவில் சிறப்பாக செயல்பட்ட அனைவரையும் வாழ்த்தி மாணவர்கள், பெற்றோர்களை பாராட்டி நன்றி தெரிவித்தார்.


Tags:    

Similar News