உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்த்த மாணவிக்கு கல்வி உதவித்தொகை

Published On 2023-06-21 13:31 IST   |   Update On 2023-06-21 13:31:00 IST
  • திருச்சி வந்த முதல்வரின் கவனத்தை ஈர்த்த கோவை மாணவிக்கு கல்வி உதவித்தொகை ரூ.61 ஆயிரம் வழங்கப்பட்டது
  • அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

திருச்சி,

திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஈர்த்தார். இதனை தொடர்ந்து அவருக்கு உதவிட திருச்சி மாவட்ட கலெக்டருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறைகளின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. தாயார் கவிதாவிடம் குழந்தையின் கல்வி கட்டணத்திற்காக ரூ.61 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார். அருகில் கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்தியநாதன், காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், அப்துல் சமது மற்றும் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News