உள்ளூர் செய்திகள்
ரூ.10½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
- திருச்சி விமான நிலையத்தில் பவுடர் வடிவில் ரூ.10½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
- கேட்பாரற்று கிடந்த அட்டை பெட்டியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வருகை பிரிவு பகுதியில் கேட்பாரற்று ஒரு அட்டை பெட்டி கிடந்தது. அதனை அதிகாரிகள் சோதனை செய்ததில் பவுடர் வடிவிலான தங்கம் இருந்தது.வெளிநாட்டில்இருந்து கடத்தி வந்த யாேரா மர்ம ஆசாமிகள் அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விட்டு சென்றுள்ளனர். அந்த அட்டை பெட்டியில்இருந்து ரூ.10 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.