உள்ளூர் செய்திகள்
தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது
- இவர் பாரதியார் சாலையில் உள்ள உடுப்பி ஓட்டல் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.
- கத்தி முனையில் சேகரை மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 2 ஆயிரத்து 100 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
திருச்சி
திருச்சி கருமண்டபம் செல்வநகர் 1-வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 48).
இவர் பாரதியார் சாலையில் உள்ள உடுப்பி ஓட்டல் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.அப்போது கருமண்டபம் ஜெ.ஆர்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி முத்தமிழ் குமரன்( 33) என்பவர் அங்கு வந்தார்.
பின்னர் அவர் பஸ் நிறுத்த நிழற்குடையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு கத்தி முனையில் சேகரை மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 2 ஆயிரத்து 100 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து ரவுடி முத்தமிழ் குமரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.