உள்ளூர் செய்திகள்

திருச்சி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை காக்க வீட்டுக்கு வீடு ஒரு செடி வளர்ப்போம் நிகழ்ச்சி

Published On 2023-09-29 09:03 GMT   |   Update On 2023-09-29 09:03 GMT
  • சுற்றுச்சூழலை காக்க வீட்டுக்கு வீடு ஒரு செடி
  • வீட்டுக்கு வீடு ஒரு செடி வளர்ப்போம் நிகழ்ச்சி


திருச்சி.


திருச்சி ராயல் லயன்ஸ் சங்கம்,திருச்சி புனித சிலுவை கல்லூரி நாட்டு நலப்பணிகள் திட்டம் இணைந்து சுற்றுச்சூழலை காக்க ஒவ்வொருவரும் வீட்டுக்கு வீடு ஒரு செடியாவது வளர்ப்போம் என்ற நிகழ்ச்சி நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பொருளாதாரத்துறை உதவி பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான மெர்லின் கோகிலா தொடக்க உரையாற்றினார். கல்லூரி செயலர் அருட் சகோதரி ஆனி சேவியர் தலைமை உரையாற்றினார். திருச்சி ராயல் லயன்ஸ் கிளப் சாசனத் தலைவர் முகமது சபி சுற்றுச்சூழலை காக்க ஒவ்வொருவரும் வீட்டுக்கு வீடு ஒரு செடியாவது வளர்ப்போம் தலைப்பில் பேசுகையில், இன்றைய சூழலில் நமது சுற்றுப்புறச் சூழல் அதிகமாக மாசுபட்டு இருக்கிறது. அதன் காரணமாக நாளுக்கு நாள் காற்றின் தூய்மை மோசமடைந்து வருகிறது. வீடுகளில் செடிகளை வளா்த்து வந்தால், தரமான, சுத்தமான மற்றும் அதிகமான ஆக்ஸிஜனைப் பெறலாம் என்றார். வீட்டுக்கு ஒரு செடி வளர்ப்போம் என உறுதியேற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளுக்கு செடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், திருச்சி ராயல் லயன்ஸ் சங்க தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன், பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன மதிப்புறு பேராசிரியர் சூர்யகுமார் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி பயன்பாட்டியல், உயிர் வேதியியல், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடப்பிரிவு இளங்கலை முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் மனோன்மணி, டாலி ஆரோக்கிய மேரி, குழந்தை பிரியா, முனைவர் ரோஸி இடியா மற்றும் ஹேமலதா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Tags:    

Similar News