உள்ளூர் செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனை புதிய டீன் பொறுப்பேற்பு

Published On 2022-06-14 14:46 IST   |   Update On 2022-06-14 14:46:00 IST
  • திருச்சி அரசு மருத்துவமனை புதிய டீனாக டாக்டர் நேரு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • பொதுமக்களும் தயக்கமின்றி எந்த நேரத்திலும் திருச்சி அரசு மருத்துவமனையை அணுகலாம்

திருச்சி:

திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை டீன் டாக்டர் வனிதா ஓய்வு பெற்றதையடுத்து, புதிய டீனாக டாக்டர். நேரு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இன்று முதல் திருச்சி அரசு மருத்துவமனையில் டீனாக பொறுப்பேற்று கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

திருச்சி அரசு மருத்துவமனையை பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கிறது. பொதுமக்களும் தயக்கமின்றி எந்த நேரத்திலும் திருச்சி அரசு மருத்துவமனையை அணுகலாம்.

திருச்சி அரசு மருத்துவமனையில் 95 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது அதில் 75 பெரியவர்களுக்கும், 20 குழந்தைகளுக்கான படுக்கைகள் உள்ளது. மேலும் அரசு வலியுறுத்தலின் பேரில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளது.

எனவே எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம். திருச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வாசதியும் போதுமான அளவிற்கு இருக்கிறது. பொதுமக்கள் கவனமாக இருக்க முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடித்து செயல்பட வேண்டும்.

இவர் அவர் கூறினார்.

பேட்டியின்போது திருச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.அருண்ராஜ் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட அனைவரும் உடனிருந்தனர். மேலும் திருச்சி அரசு மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் புதிதாக டீனாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் நேருவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News