உள்ளூர் செய்திகள்

மணப்பாறை அருகேபெண்ணுக்கு பாலியல் தொல்லை;விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி மீது வழக்கு

Published On 2023-10-14 14:42 IST   |   Update On 2023-10-14 14:42:00 IST
  • மணப்பாறை அருகே சம்பவம்
  • பெண்ணுக்கு பாலியல் தொல்லை;
  • விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி மீது வழக்கு


திருச்சி,


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்.இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பி னராக பதவி வகித்து வருகிறார்.


இவருடைய வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மணிமேகலை (45) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார்.


அப்போது மணிமே கலைக்கு பண்டியன் பாலியல் தொல்லை கொடு த்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து மணிமேகலை வேலையில் இருந்து நின்று விட்டார்.


இருப்பினும் வேலைக்கு வர சொல்லி பாண்டியன் அவரை நிர்பந்தம் செய்து வந்தார். ஆனாலும் அவர் வேலைக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், மணி மேலையை தகாத வார்த்தை களால் திட்டியதோடு சம்ப வத்தை வெளியில் சொ ன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.


பின்னர் பாதி க்கப்பட்ட மணிமே கலை, பாண்டி யன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.


இந்த விவகாரத்தில உயர்நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க காவல் துறை யினருக்கு உத்தரவி ட்டதை அடுத்து மணப்பாறை அனை த்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெ க்டர் பால கிருத்திகா என்.ஆர்.என் பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.




Tags:    

Similar News