உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி ஜெப கூட்டத்திற்கு சென்ற தாய்-மகன் மாயம்

Published On 2023-10-17 14:40 IST   |   Update On 2023-10-17 14:40:00 IST
  • தூத்துக்குடி ஜெப கூட்டம்
  • ஜெப கூட்டத்திற்கு சென்ற தாய்-மகன் மாயம்


திருச்சி, 


திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் ராஜ். இவரது மனைவி ஜெயராணி (வயது 57). இந்த தம்பதியரின் மகன் அந்தோணி விஜய் (27).


தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயராணி, தனது மகன் ஆண்டனி உடன் சென்றார்.பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஜெயராணியின் மூத்த மகன் ஆரோக்கிய பெலிக்ஸ் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் தாய் மகன் இருவரையும் தேடி வருகின்றனர்


Tags:    

Similar News