உள்ளூர் செய்திகள்
- குழந்தையுடன் இளம்பென் மாயமானார்
- குடுமப தகராறு அடிக்கடி நடக்குமாம்
திருச்சி
திருச்சி உறையூர் பாளையம் பஜார் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி (வயது 22) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர். இந்தநிலையில் மணிமொழி சம்பவத்தன்று தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வெங்கடேஷ் உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் மாயமான மணிமொழியை தேடி வருகின்றனர்.