திருச்சி வையம்பட்டியில் நடுரோட்டில்தொழிலாளியை காலால் எட்டி உதைத்து தாக்கிய வாலிபர்வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
- திருச்சி வையம்பட்டியில் நடுரோட்டில் சம்பவம்
- தொழிலாளியை காலால் எட்டி உதைத்து தாக்கிய வாலிபர்
- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
திருச்சி,
திருச்சி வையம்பட்டி தொப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் வையம்பட்டியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் ராஜேந்தி ரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்செ ல்வனுக்கும் அவரது சகோதரர் லோகநாத னுக்கும் இடையே நிலத்த கராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. தமிழ்செ ல்வனுக்கு ஆதரவாக அவரது கடையில் வேலை பார்க்கும் ராஜே ந்திரனும், லோகநாதனுக்கு ஆதரவாக ஷாஜகானும் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் வையம்பட்டி பகுதியில் வைத்து ராஜேந்திரனுக்கும் ஷாஜகானுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்ப ட்டது. பின்னர் அது கைகல ப்பாக மாறியது. அதில் ஆத்திரம் அடைந்த ஷாஜ கான், ராஜேந்திரனை அடித்து உதைத்து தாக்கி னார்.
இதனை தமிழ்செல்வன் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டார். இது தற்போது வையம்பட்டி பகுதியில் வைரல் ஆகியு ள்ளது. இந்த மோதல் தொடர்பாக ஷாஜகான் மீது வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.