உள்ளூர் செய்திகள்

போலீசுக்கு பயந்து விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2023-08-24 13:59 IST   |   Update On 2023-08-24 13:59:00 IST
  • திருச்சி தென்னூரில் போலீசுக்கு பயந்து விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்
  • விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தப்பி ஓடி உயிரிழந்தார்

திருச்சி,

திருச்சி பொன்னகர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேஷ் (வயது 47). குடிபோதையில் தனது உறவினர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது.இந்த தகராறில் அவர் செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்தில் சுரேஸ் மீது புகார் அளித்தார். புகாரை திரும்ப பெறுமாறு அந்த நபரிடம் வலியுறுத்தி உள்ளார். புகாரை திரும்ப பெறவிட்டால் விஷம் குடித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் குடிபோதையில் சுரேஷ் விஷத்தை குடித்து விட்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பிஓடிய சுரேஷ் தென்னூர் தனியார் மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகில் மயங்கிய நிலையில் கிடந்தார். மீண்டும் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News