உள்ளூர் செய்திகள்

ஒரு வயது குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய பேட்டரியை அகற்றிய மருத்துவர்கள்

Published On 2023-09-28 14:24 IST   |   Update On 2023-09-28 14:24:00 IST
  • ஒரு வயது குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய பேட்டரி
  • உணவுக்குழாயில் சிக்கிய பேட்டரியை அகற்றிய மருத்துவர்கள்

திருச்சி,

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது ஒரு வயது குழந்தை இனியா விளையாட்டு பொம்மைகளுக்கு பொருத்தும் பேட்டரியை கடந்த 21-ந்தேதி விழுங்கியதையடுத்து நல்லதம்பியின் உறவினர்கள குழந்தையை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிேசாதித்த மருத்துவர்கள் பேட்டரியை படிப்படியாக இறங்கி உணவுக்குழர்க்கு செல்வதை அறிந்து குழந்தையை உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மறுநாள் 22-ந்தேதி அரசு மருத்துவமனை மயக்க மருந்து நிபுணர்கள் உதவியுடன் மருத்துவர்கள் ஆர்.ஆர்.கண்ணன், சங்கர், ராஜசேகரன், கார்த்திகேயன், சுதாகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் எண்டோஸ்கோபி மூலம் நீண்ட நேரம் போராடி உவ்வித உபாதைகளும் ஏற்படாத வகையில் உணவுக்குழாயில் இருந்த பேட்டரியை அகற்றினர். இந்த பேட்டரியை உடனடியாக அகற்றி இருக்காவிட்டால் ஒரிரு நாட்களில் உணவுக்குழாயில் ஒட்டை ஏற்படுத்தி குழந்தையின் வாழ்வை கேள்விக்குறியாக்கியிரு க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை இனியா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போ அந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளது.

திருச்சி மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது முதல் முறை என்பதால் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவ கல்லரி முதல்வர் நேரு பாராட்டு தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News