உள்ளூர் செய்திகள்

திருச்சியில் 29-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-07-27 15:32 IST   |   Update On 2022-07-27 15:32:00 IST
  • 29-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
  • கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இந்த கூட்டம் நடை பெறுகிறது.

திருச்சி :

திருச்சி மாவட்டஅளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர் பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கானநலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள்மூலமாகவோ தெரிவித்து பயனடையாலாம்.

இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News