- துறையூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்
- துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது43). இவருக்கு அதே கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று இவரது விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டாரில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கிருஷ்ணன் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், தானே மின்கம்பத்தில் ஏறி மின் தடையினை சரி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.அப்பொழுது கிருஷ்ணனை மின்சாரம் தாக்கியது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிருஷ்ணனை உடனடியாக துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவத்தை அறிந்த துறையூர் போலீசார், கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.