உள்ளூர் செய்திகள்

எடமலைப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தி.மு.க. கவுன்சிலரால் பரபரப்பு

Published On 2022-07-22 09:53 GMT   |   Update On 2022-07-22 09:53 GMT
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற இன்று உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் பணியாளர்களுடன் சம்பவ இடம் சென்றனர்.
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற இன்று உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் பணியாளர்களுடன் சம்பவ இடம் சென்றனர்.

திருச்சி:

திருச்சி மாநகராட்சி 57-வது வார்டு எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். பின்னர் இன்று உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் பணியாளர்களுடன் சம்பவ இடம் சென்றனர்.

ஆனால் வெகு நேரம் ஆகியும் பாதுகாப்புக்கு போலீசார் வரவில்லை. இதையடுத்து அப்பகுதி தி.மு.க. கவுன்சிலரும், கட்சியின் மாவட்ட துணைச் செயலாளருமான முத்துச்செல்வன் மற்றும் கட்சியினர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது ஆடி வெள்ளி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதுகாப்புக்கு பல்வேறு இடங்களுக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். காவல் நிலையத்தில் போதுமான அளவுக்கு போலீசார் இல்லை. எனவே வருகிற திங்கட்கிழமை ஆக்கிரமிப்பு அகற்ற பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே முன்கூட்டியே மாநகராட்சி சார்பில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசாரை அனுப்ப இயலவில்லை என்பதை தெரிவிக்கவில்லை. ஏதேனும் சதி இருக்கலாம் என சந்தேகிப்பதாக கட்சியினர் கூறினர்.

Tags:    

Similar News