உள்ளூர் செய்திகள்

நடன மாணவி மாயம்

Published On 2023-09-25 15:04 IST   |   Update On 2023-09-25 15:04:00 IST
  • திருச்சி பொன்மலைபட்டியில் நடன மாணவி மாயம்
  • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்

திருச்சி,

திருச்சி பொன்மலைப்பட்டி திரு.வி.க தெரு சி.வி.டி.ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ஹரிணி. இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் கிளாசிக்கல் டான்ஸ் பயிற்சி பெற்று வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் உமா மகேஸ்வரி பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News