2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வு
- 2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெற்றது
- 17,871 பேர் எழுதினார்கள்
திருச்சி:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று தமிழகம் முழுவதும் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. திருச்சி மாநகரில் 16 மையங்களில் 8,371 பேரும், புறநகர் பகுதியில் 7 மையங்களில் 9500 பேரும் இந்த தேர்வினை எழுதுகின்றனர்.
இதையடுத்து காலை 7 மணி முதல் மையங்களுக்கு தேர்வு எழுதும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வரத் தொடங்கினர்.
தேர்வு மையத்துக்குள் பேனா மற்றும் கால் டிக்கெட் தவிர வேறு எந்த பொருளும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக டிஜிட்டல் வாட்ச்,செல்போன் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு விரைவில் உடற் தகுதி தேர்வு நடத்தப்பட்டு காவலராக தேர்வு செய்யப்படுவார்கள்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தேர்வு நடந்த மையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.