உள்ளூர் செய்திகள்

துறையூரில் புதிய ரேஷன் கடை திறப்பு

Published On 2023-03-19 14:25 IST   |   Update On 2023-03-19 14:25:00 IST
  • எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்.
  • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு மற்றும் ஒன்பதாவது வார்டு பகுதி மக்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் பெற்று வந்தனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சொந்தமாக புதிய ரேஷன் கடை அமைத்து தருமாறு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, கட்டிடப் பணிகள் முடிவுற்றது. இதனை தொடர்ந்து நேற்று புதிய ரேஷன் கடை திறக்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிய ரேஷன் கடையினை ரிப்பன் வெட்டி எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துறையூர் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், நகர்மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகர்மன்ற உறுப்பினர்கள் இளையராஜா, சுதாகர், கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர துணை செயலாளர்கள் இளங்கோ, பிரபு, நகர இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News