உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்-திருச்சி தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

Published On 2022-12-25 13:06 IST   |   Update On 2022-12-25 13:06:00 IST
  • திருச்சி தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்
  • தேவாலயங்கள் வண்ண வண்ண ஸ்டார்கள், அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன

திருச்சி :

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை–யொட்டி நேற்று இரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் குடில்களில் இயேசு கிறிஸ்துவின் சொரூபம் வைக்கப்பட்டு பிரார்த்தனை நடந்தது. அதே–போன்று இன்று அதிகாலை 5 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடை–பெற்றன. இதற்காக தேவாலயங்கள், வண்ண வண்ண ஸ்டார்கள், அலங்கார மின்விளக்குகள், குடில்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தன. திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியசாமி, திருச்சி-தஞ்சை திருமண்டல பேரா–யர் தன்ராஜ் சந்திரசேகரன், லுத்ரன் திருச்சபை பேராயர் ஆகி–யோர் தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்த–னை–களில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி அளித்தனர். திருச்சி மேலப்புதூர் மரியன்னை ஆலயம், பாலக்கரை பசிலிக்கா, புத்தூர் பாத்திமா, மெயின் கார்டு கேட் தூய வளனார் ஆல–யம், பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம், பெரிய மிளகுபாறை சந்தியாகப்பர் ஆலயம், கருமண்டபம் ஆரோக்கிய மாதா ஆலயம், மார்க் ஆலயம், காட்டூர் பிலோமினாள் ஆலயம், வெனிஸ் நகர் செபஸ்தியார் ஆலயம், கே.கே.நகர் ஜெகன் மாதா ஆலயம், திருச்சி பொன்ன–கர் ஏ.ஜி. சபை, தலைமை தபால் நிலையம் லூத்ரன் திருச்சபை உள்ளிட்ட ஏரா–ளமான தேவா–லயங்க–ளில் சிறப்பு பிரார்த்த–னைகள் நடைபெற்றன. கிறிஸ்தவ தேவலாயங்க–ளில் வழங்கப்பட்ட நற் செய்திகளில் இயேசு கிறிஸ்து உலகில் மனிதர் களை பாவங்களில் இருந்து ரட்சிக்கவும், ஏழை–களுக்கு இரங்கவும், மாட்டுத்தொ–ழுவத்தில் கன்னி மரியா–ளுக்கு மகனாக பிறந்தார். இயேசுவின் பிறப்பு எளி–மையானது. ஏழை–களிடம் இரக்கம் காட்டுங்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் நாம் இயேசுவின் பிள்ளைகளாக மாறுகிறோம். ஏழைகளுக்கு உதவி செய்கிற ஒவ்வொரு நேரத்திலும் இயேசு உங்க–ளுக்குள் பிரவே–சிப்பார். அந்த ஒவ்வொரு நாளும் நன்னாள்தான் என செய்தி அளித்தனர். தேவாலயங்களுக்கு வந்த கிறிஸ்தவர்கள் ஒருவ–ருக்கொருவர் ஆரத்தழுவி–யும், கை குலுக்கியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.


Tags:    

Similar News