உள்ளூர் செய்திகள்
சிறுமியை திருமணத்திற்கு கட்டாய படுத்திய வாலிபர் போக்சோவில் கைது
- ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணத்திற்கு கட்டாய படுத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்
- திருவெறும்பூர் மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
திருச்சி,
திருச்சி, காட்டுரை சேர்ந்த தம்பதியரின் 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகேயுள்ள திருமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் ரா.பாலமுருகன்(வயது 37).சிறுமியின் உறவினரான இவருக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தையும் உள்ளது.இந்த நிலையில் தனக்குத் திருமணம் ஆகவில்லை எனக் கூறி அந்த சிறுமியிடம் பழகியுள்ளார். மேலும் அவரிடம் ஆசை வார்த்தை கூறி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப் படுத்தியுள்ளார்.இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருவெறும்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின பேரில் போலீசார் விரைந்து சென்று பாலமுருகனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.