உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. தொழில் துறை பிரிவு தலைவர் நியமனம்

Published On 2022-06-29 09:32 GMT   |   Update On 2022-06-29 09:32 GMT
  • திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொழில் துறை பிரிவு தலைவராக ஸ்ரீராம் சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • புதிய பொறுப்பினை ஏற்றுக் கொண்ட ஸ்ரீராம் சங்கர் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்

திருச்சி:

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன்ஜி ஆகியோரின் வழிகாட்டுதல்படி, மாநில பொதுச் செயலாளரும்,

திருச்சி கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் ஆலோசனையின்படி, திருச்சி மாநகர் மாவட்ட பார்வையாளர் எம்.சிவசுப்பிரமணியன் ஒப்புதலோடு, திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன், மாவட்ட தொழில் துறை பிரிவு தலைவராக ஸ்ரீராம் சங்கரை நியமனம் செய்துள்ளார்.

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த இவர் நீண்ட காலமாக கட்சி பணியாற்றி வருகிறார். புதிய பொறுப்பினை ஏற்றுக் கொண்ட ஸ்ரீராம் சங்கர் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

ேமலும் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோரிடம் வாழ்த்து பெற்றார்.

ஸ்ரீராம் சங்கருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், நண்பர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News