உள்ளூர் செய்திகள்

குமாரவயலூர் முருகன் கோவிலில் களையிழந்த தைப்பூசத்திருவிழா

Published On 2023-02-04 08:17 GMT   |   Update On 2023-02-04 08:17 GMT
  • பக்தர்கள் கூட்டம் குறைந்தது
  • இன்றும், நாளையும் பூசம் நட்சத்திரம்

ராம்ஜிநகர்,

திருச்சி குமார வயலூர் முருகன் கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப் பட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. காலை 11.40 மணிக்கு மேல், நாளை மதியம் 11.30 வரை பூச நட்சத்திரம் இருப்பதாலும் அனைத்து தினசரி நாட்காட்டிகளிலும் நாளை தைப்பூசம் என்று குறுப்பிடப்பட்டு இருப்ப–தாலும் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர்.ஒரு சில பக்தர்களே இன்று வயலூர் முருகன் கோவிலிக்கு வருகை தந்து முருகனை வழிபட்டு சென்றனர். எப்போதும் தைப்பூச நாளன்று பல்லா–யி–ரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோ–தும் வயலூர் முருகன் கோவில் இன்று இன்று ஒரு சில பக்தர்கள் வருகை–யால் தைப்பூச திருவிழா களையிழந்து காணப் படுகிறது.

இன்று மதியம் 12 மணியளவில் அபிஷேக ஆராதனை நடைபெற்று சுமார் 1 மணியளவில் கோவி–லிலிருந்து முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு அதவத் தூர் உய்யக் கொண் டான் ஆற்றின் கரையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இன்று இரவு 8.30 மணியளவில் அலங்காரத்துடன் மகாதீபா–ரதனை நடைபெறுகிறது.

இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு வய–லூர் வழியாக சோமரசம் பேட்டை அருகே உள்ள வரகன்திடலுக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும் முத்துக்குமாரசாமி அங்கு தரும் மண்டகப்படியை ஏற்றுக்கொண்டு இரவு 11 மணியளவில் கீழவயலூர் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வடகாபுத்தூர் வந்தடையும் முத்துக்குமாரசுவாமி அங்கு இரவு தங்கி அங்கிருந்து நாளை காலை 8.30 மணியாளவில் புறப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி காலை 10.30 மணியளவில் சோமரசம் பேட்டை வந்தடைகிறார். அங்கு முத்துக்குமாரசாமி, சோமரசம்பேட்டை முத்து–மாரியம்மன், உய்யக் கொண்டான் திருமலை உஜ்ஜிவநாதர், அல்லித் துறை பார்வதி ஈஸ்வரர், சோழங்கநல்லூர் காசி விசு–வநாதர் ஆகிய தெய்வங் க–ளுக்கு சந்திப்பு தருகி–றார்.

பின்பு சோமரசம்பேட்டை நான்கு வீதிகளிலும் வலம் வந்து அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தரு–ளுகிறார். அதேபோன்று அனைத்து சுவாமிகளும் இரவு 7 மணி வரை அங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர் பின்னர் அனைத்து சாமிக–ளும் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது சோமரசம் பேட்டையில் இருந்து புறப் படும் முத்துக்குமாரசுவாமி அல்லித்துறை மற்றும் அத–வத்தூரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து நாளை இரவு அதவத்தூரில் தங்குகிறார்.

நாளை மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வந்தடைகிறார். இன்று முழுவதும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வயலூருக்கு சிறப்பு பேருந் துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில், ஜீயபுரம் டி.எஸ்.பி. பாரதிதாசன் தலைமையில், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக் டர் உதயகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலை–யத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவு–ரையின்படி உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதி–காரி அருண்பாண்டியன் மற்றும் வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை முருகேசன், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News