உள்ளூர் செய்திகள்
போலி பாஸ்போர்ட்டுடன் விமானத்தில் வந்தவர் கைது
- போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று திருச்சிக்கு திரும்பியவர கைது
- திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை
திருச்சி,
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கரியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (வயது 58).இவர் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரை அசோகன் என மாற்றி வெளிநாட்டுக்குச் சென்றார். பின்னர் மலிண்டோ விமானம் மூலம் திருச்சி திரும்பிய போது, அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் முறைகேடு உறுதியானது.அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து பக்கிரி சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.