உள்ளூர் செய்திகள்

காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2023-06-30 13:49 IST   |   Update On 2023-06-30 13:49:00 IST
  • காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
  • மணமக்களை மணமகளின் பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

தொட்டியம்,

கரூர் தாந்தோணிமலையை சேர்ந்த ராஜகோபால் மகன் சசிகுமார் (வயது25), இவரும் காட்டுப்புத்தூர் அருகேயுள்ள மேலமஞ்சமேடு சேர்ந்த பெருமாள் மகள் ஆர்த்தி (25) என்பவரும் கரூரில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல்சில் பணிபுரிந்தவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் பெத்தனூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தங்களது குடும்பத்தாரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மணமகன் வீட்டார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது. மேலும் மணமகனை விசாரித்ததில் மணமகளுடன் (காதலியுடன்) செல்வதாக உறுதியளித்ததன் பேரில் மணமகள் வீட்டார் சம்மதத்துடன் மணமக்களை மணமகளின் பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News