உள்ளூர் செய்திகள்

ஏர்போர்ட் டைரக்டரை சோதனை செய்த சிஐஎஸ்எப் வீரர்

Published On 2023-06-14 06:57 GMT   |   Update On 2023-06-14 06:57 GMT
  • திருச்சி விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சோதனை
  • வேறு பிரிவுக்கு அதிரடி மாற்றம்

திருச்சி,

திருச்சி விமான நிலைய இயக்குனராக பணிபுரிந்து வருபவர் சுப்ரமணி. இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளிமாநிலத்தில் இருந்து திருச்சி விமான நிலையத் திற்கு மாற்றப்பட்டு பணி–யாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தின் முனைய பகு–திக்குள் அவர் வந்தார். அப் போது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வீரர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார்.அதனை விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி காண் பித்த பின்னரும் அவரை உள்ளே அனுமதிக்காமல், அவர் அளித்த அடையாள அட்டையை ஸ்கேனர் கருவி மூலம் மீண்டும் சோதனை செய்துள்ளார். இருந்தபோதிலும் விமான நிலைய இயக்குனர் இது குறித்து கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக சென்றுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத் திற்கு வந்து அவரிடம் விளக்கம் கேட்டனர்.இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் உடனடியாக வேறு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வானது விமான நிலையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்ப–டுத்தியது. பணியில் இருந்த காவலருக்கு விமான நிலைய இயக்குனரை கூட தெரியா–மல் அவர் எவ்வாறு பணி–புரிந்தார் என மத்திய தொழில் பாதுகாப்பு படை–யினரிடம் கேள்வி எழுப்பப் பட்டு வருகிறது.மேலும் விமான நிலைய இயக்கு–னரை சோதனை செய்யும் நிலை இதுபோன்று பலமுறை நடைபெற்று இருப்பதும், இதனை மத்திய தொழில் பாதுகாப்பு படை–யினர் செய்து வருவதாகவும் தெரிவித்தனர். மற்ற அலுவலர்களோ, அதிகாரிகளோ விமான நிலையத்திற்குள் நுழையும் போது அவர்களது அடை–யாள அட்டையை காண்பித் தால் உள்ளே அனுமதிக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ஒரு விமான நிலைய இயக்குனர் முனை–யத்திற்குள் நுழையும்போது அவரின் அடையாள அட் டையை ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பின்பு உள்ளே அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்ப–டுத்தி உள்ளது.

Tags:    

Similar News