உள்ளூர் செய்திகள்

400 தள்ளுவண்டி, தரைக்கடைகள் திடீர் அகற்றம்

Published On 2023-02-09 08:32 GMT   |   Update On 2023-02-09 08:32 GMT
  • மாநகராட்சி ஊழியர்களுடன் வியாபாரிகள் மோதல்
  • சத்திரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

திருச்சி, 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஆக்கி–ரமிப்புகள் அதிகம் உள்ள–தாக புகார்கள் எழுந்தது. இதனால் தினமும் போக்கு–வரத்துக்கு இடையூறும் ஏற் பட்டது.இது தொடர்பாக மாநக–ராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) பெரியசாமி டவர், சத்திரம் பேருந்து நிலையம், சிங்கா–ரத்தோப்பு, சிந்தாமணி பஜார், காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.இதில் 400-க்கும் மேற் பட்ட தரைக்கடைகள், தள்ளுவண்டி மற்றும் பெட்டி கடைகளை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உத்தரவின் பேரில், மாநகராட்சி உதவி ஆணையர் ரவி தலை–மையில், மாநகராட்சி அதி–காரிகள் மற்றும் கோட்டை காவல் நிலைய இன்ஸ் பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது மாநகராட்சி உதவி செயற்பொ–றியாளர் பாலசுப்பிர–மணியன், இள–நிலை பொறியாளர் கணேஷ் பாபு மற்றும் மாநக–ராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பேன்சி பொருட்கள் விற் பனை பெட்டிக்கடையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டபோது அந்த கடையின் பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை ஒருமையில் அவதூறாக பேசினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளை பார்த்து இது யாருடைய கடை என தெரியுமா? என கூறி மிரட்டும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியர்கள் மற்றும் அதிகா–ரிகளை தாக்க முற்பட்டனர்.உடனடியாக அருகில் இருந்த போலீசார் கடையின் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை விலக்கி விட்டனர். அதனை தொடர்ந்து ஜே.சி.பி. எந்தி–ரம் மூலம் அந்த பெட்டி கடை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள ஆக்கி–ரமிப்புகளை மாநக–ராட்சி ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.அப்போது வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News