உள்ளூர் செய்திகள்

யோகாவில் 2-ம் வகுப்பு மாணவன் புதிய சாதனை

Published On 2022-12-22 15:14 IST   |   Update On 2022-12-22 15:14:00 IST
  • யோகாவில் 2-ம் வகுப்பு மாணவன் புதிய சாதனை படைத்துள்ளார்
  • 8 நிமிடங்கள் தலைகீழாக நின்று

திருச்சி:

திருச்சியை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவன் அக்‌ஷய்ராஜ் கராத்தே, யோகா, சிலம்பம் உள்ளிட்ட கலைகளை கற்றுள்ளார். உலக யோகா தினத்தை முன்னிட்டு 8 நிமிடங்கள் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நேஷனல் ரெகார்ட்ஸ், ஆசிய பசிபிக் சாதனை உள்ளிட்ட 3 உலக சாதனைகள் படைத்துள்ளார். அந்த சிறுவன் புதிய முயற்சியாக சின் ஸ்டாண்ட் போஸ் யோகாவை 4 நிமிடம் 3 வினாடி செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவருடைய சாதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் டெல்லியில் உள்ள சில்ட்ரன்ஸ் ரெக்கார்ட்ஸ் குளோபல் ரெகார்ட்ஸ் ஆசிய பசிபிக் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகத்தில் இடம் பெற அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லி கின்னஸ் சாதனையாளர் சாய்னா ஜெட்லி மற்றும் மாணவரின் பெற்றோர் அன்புராஜ், செல்வி மற்றும் கராத்தே யோகா சிலம்ப வீரர்களும் பாராட்டியுள்ளனர்.

Tags:    

Similar News